சுடச்சுட

  

  புதுவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவாக நெல்லித்தோப்பில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

  வள்ளலார் வீதி, புது ஐயனார் கோயில் வீதி, ஆனந்தமுத்துமாரியம்மன் கோயில், கோவிந்தநாயக்கர் வீதி, கேசி நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் மாநில பேரவைச் செயலரும், தொகுதி எம்.எல்.ஏவுமான ஓம்சக்தி சேகர் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

  அப்போது அவர் பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக நெல்லித்தோப்பு பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நிதி பற்றாக்குறையால் மக்கள் நலத்திட்டங்கள் முடங்கி உள்ளன.

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை வெற்றி பெறச் செய்தால், நிதிப்பற்றாக்குறை நீக்கப்படும். புதுவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வரலாம்.

  புதுவை மாநில அந்தஸ்து தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமியும் ஏமாற்றி வருகின்றனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai