சுடச்சுட

  

  பல்கலை. மாணவரை தாக்கியவர்களை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவரை தாக்கிய பேராசிரியர் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  இது குறித்து சங்கத் தலைவர் வை.பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை பல்கலைக்கழகத்தில் பொய் குற்றச்சாட்டு கூறி மாணவர் ராதாகிருஷ்ணனை, பேராசிரியர்கள் ஹரிகரன், பூஷன் சுதாகர், பாதுகாப்பு அலுவலர்கள் ஷாம்சுந்தர், குணசேகரன் ஆகியோர் சட்டவிரோதமாக வைத்து துன்புறுத்தியுள்ளனர்.

  இவக்கள் 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். காவல் துறையும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரியாக, காவல் கண்காணிப்பாளரை மீண்டும் நியமிக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai