சுடச்சுட

    

    புதுவை-ஏனாம் ரயில் சேவை:பாமக வேட்பாளர் வாக்குறுதி

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை-ஏனாம் பகுதிகளுக்கு இடையே ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுப்போம் என்று பாமக வேட்பாளர் அனந்தராமன் பிரசாரத்தில் வாக்குறுதியளித்தார்.

    புதுவை தட்டாஞ்சாவடி பகுதியில் பாமக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலச் செயலருமான ஆர்.கே.ஆர்.அனந்தராமன் புதன்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

    மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் விட்டதால் பொதுமக்களை கடன்காரர்களாக மாற்றிவிட்டது. தொடர்ந்து 23 ஆண்டுகள் எம்பியாக இருந்த நாராயணசாமியும், 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ரங்கசாமியும் புதுவைக்காக எதையும் செய்யவில்லை.

    என்னை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்தால், புதுவையின் கடன் தொகை ரூ.6 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், புதுவையில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் உரிய நடவடிக்கை எடுப்பேன்.

    மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களைப் பெற பாமக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்.

    தனி மாநில அந்தஸ்து பெற பாடுபடுவோம். ஏனாமிலிருந்து சென்னை, புதுவை வழியாக காரைக்காலுக்கு புதிய ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுப்போம். மாற்றத்தை உருவாக்க பாமகவை ஆதரிக்க வேண்டும் என்றார் அனந்தராமன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai