சுடச்சுட

    

    புதுவை பல்கலைக்கழகத்தில் தேசிய பயிற்சிப் பட்டறை

    By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி பல்கலைக்கழக சமூகப் பணித் துறை, சத்தியா சிறப்புப் பள்ளி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த பயிற்சி, நடப்பு யுக்திகளை கையாள்வது குறித்த தேசிய பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

    சமூகப் பணித் துறைத் தலைவர் ஆர்.நளினி வரவேற்றார். சத்யா சிறப்புப் பள்ளி இயக்குநர் சித்ராஷா, பயிற்சிப் பட்டறை குறித்து கருத்துரை ஆற்றினார். இத்தாலி நாட்டு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை நிபுணர் மேட்டூ லெவி, சிறப்புரையாற்றினார். கமாண்டர் பவுண்டேசன் தலைவர் மைதிலி சாரி, பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறந்த பயிற்சி, அவர்களுக்கான சிறந்த தொழில்நுட்ப யுக்திகளை கையாள்வது குறித்து பயிற்சி தரப்பட்டது.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai