சுடச்சுட

    

    புதுவை மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை கொண்டு வருவேன்

    By காரைக்கால்  |   Published on : 17th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை கொண்டு வருவேன் என்று உறுதியளித்தார் புதுவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிம்.

    காரைக்கால் கடைதெரு பகுதியில் வாக்கு சேகரித்து அவர் பேசியது:

    திமுக வேட்பாளராக காரைக்காலை சேர்ந்த எனக்கு திமுக அளித்திருக்கும் வாய்ப்பு, காரைக்காலுக்கு கிடைத்த பெருமை. காரைக்காலை சேர்ந்தவர் வேட்பாளராக இருக்கிறாரே என்ற கருத்து புதுச்சேரி, மாஹே, ஏனாம் பிராந்திய மக்களிடையே இல்லை. அனைத்து பிராந்திய மக்களும் மாற்றத்தை விரும்புகின்றனர். நான் தேர்வு செய்யப்பட்டால், நேர்மையாக செயலாற்றி, புதுவை மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து திட்டங்களை கொண்டு வருவேன்.

    புதுவைக்கு இதுவரை கொண்டுவராத திட்டங்களை அமல்படுத்துவதே எனது குறிகோள்.

    புதுவையில் ரங்கசாமியும், நாராயணசாமியும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றனர். இருவரும் இந்த தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் என்றார் நாஜிம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai