சுடச்சுட

  

  பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி கையெழுத்து இயக்கம்

  By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

  புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவன் ராதாகிருஷ்ணன், மாணவிகள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அவரை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஹரிஹரன், பூஷன் சுதாகர் மற்றும் இரண்டு காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

  இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பேராசிரியர்கள், காவலர்கள் மீது காலாப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  இந்நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி ஒப்புக் கொள்ளாததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேந்தரும், குடியரசு துணைத் தலைவருமான ஹமீது அன்சாரிக்கு மனு அனுப்புவதற்காக மாணவர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai