சுடச்சுட

    

    மகளிர் குழுவினருக்கு டீ: ஆளும் கட்சிப் பிரமுகர் மீது வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை அருகே மகளிர் குழுக்கூட்டத்தில் டீ வழங்கியதாக ஆளும் கட்சிப் பிரமுகர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    புதுவை மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலத்தில், கடந்த சனிக்கிழமை மகளிர் சுய உதவிக்குழுவினரின் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு, டீ, சமோசா வழங்கியுள்ளனர்.

    இதனை ஆய்வு செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராமச்சந்திரன், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வாக்காளர்களை கவரும் விதத்தில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் டீ, சமோசா வழங்கியதாக புகார் கொடுத்தார்.

    அதன் பேரில், டீ வழங்கிய கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த அக்கட்சி பிரமுகர் கிருஷ்ணன்(44) மீது, மங்கலம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai