சுடச்சுட

  

  மதுபானக் கடைகளின் விற்பனையை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு

  By காரைக்கால்,  |   Published on : 17th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் மாவட்டத்தில் மதுபானக் கடைகளிலும் நடைபெறும் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணிக்க பறக்கும் படையினருக்கு தேர்தல் பொது பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.

  காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் எம். அங்கமுத்து தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் பொது பார்வையாளர் எம். அங்கமுத்து பேசியது: கடந்த தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் எந்தெந்த பூத்துகளில் 80 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவானதோ, அப்பகுதியில் கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட குழுவினருக்கு தெரிவிக்க வேண்டும். வேட்பாளரின் பிரசாரத்தை குழுவினர் கண்காணிப்பதுடன், செலவினத்தை ஆய்வு செய்து வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்

  மதுக்கடைகளில் நடைபெறும் மது விற்பனை அளவு, மது வெளியில் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணித்து கடை விவரத்துடன் உரிய நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க என்றார் அவர்.

  மாவட்ட ஆட்சியர் அ.முத்தம்மா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ், கூடுதல் ஆட்சியர் எல். முகமது மன்சூர், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாணிக்கதீபன், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai