சுடச்சுட

  

  மனித உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழக ஆலோசனைக் கூட்டம்

  By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மனித உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழக ஆலோசனைக் கூட்டம் புதுவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  பொதுச் செயலாளர் இரா.முருகானந்தம் தலைமை வகித்தார். பல்வேறு தோழமை இயக்க நிர்வாகிகள் இரா.அழகிரி, ஜெகந்நாதன், மு.தமிழ்மணி, பா.அழகானந்தம், ராஜசேகர், வீரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

  கூட்டத்தில், போலீஸார் விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். ஆனால் புதுவையில் போலீஸார் அதை கடைபிடிப்பதில்லை. சாதாரண மக்கள் சென்று புகார் செய்தால் பதிவு செய்யப்படுவதில்லை. நீதிமன்ற உத்தரவு பெற்ற

  பின்னரே வழக்குப் பதிவு செய்கின்றனர்.

  அரசு உடனே இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். எங்கள் அமைப்பின் உறுப்பினர் முல்லைநாதன் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து புகார் ஆணையத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

  போலீஸார் இப்பிரச்னையில் அலட்சியம் காண்பித்தால் தொண்டர்களை திரட்டி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai