சுடச்சுட

  

  புதுவையில் மீனவர்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் ரங்கசாமி அரசு புறக்கணித்து விட்டது என அதிமுக புகார் கூறியுள்ளது.

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் தொகுதியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரம் செய்த மாநிலச் செயலாளர் அன்பழகன் பேசியது:

  தேர்தலுக்காகவே ரங்கசாமியும், நாராயணசாமியும் மக்களை சந்திக்க வருகின்றனர்.

  உப்பளம் தொகுதியில் சுனாமி பேரலையின் போது பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் வீடு கட்டித் தரவில்லை. கல்வீடாக இருந்தால் செப்பனிட ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதையும் செயல்படுத்தவில்லை. மீன் பிடித் தடைக்காலத்துக்கான நிவாரணத் தொகையை மிகவும் தாமதமாக வழங்கி வருகின்றனர். இதனால் மீனவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். மீன்பிடி சாதனங்கள் வாங்க எந்த கடனுதவியும் தரப்படவில்லை.

  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக வங்கி வழங்கிய நிதியை ரங்கசாமி தனது தொகுதி மக்களுக்கு செலவிட்டார். காலாப்பட்டில் கட்டப்பட்ட மீனவர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் கூட செய்யாத நிலை உள்ளது. மீனவ கிராமங்களை காப்பாற்ற தூண்டில் வளைவு எங்கும் அமைக்கப்படவில்லை. இதனால் சோலை நகர், வைத்திகுப்பம், காலாப்பட்டு மீனவ கிராமங்கள் இன்னும் சில

  ஆண்டுகளில் அழியும் அபாயம் உள்ளது.

  தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகம், புதுவை மீனவர்கள் எனப் பிரித்து பாராமல் ஒட்டுமொத்த மீனவர் இனத்துக்கும் பாதுகாப்பாக உள்ளார். இலங்கை கடற்படை தாக்கும் போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மீனவ சமூக மக்கள் வரும் தேர்தலில் வேட்பாளர்

  ஓமலிங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

  என்றார் அன்பழகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai