சுடச்சுட

  

  ரூ.55 லட்சம் சில்லறைக் காசுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

  By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே ரூ.55 லட்சம் சில்லறைக் காசுகள் ஏற்றி வந்த மினி லாரியை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

  புதுவை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியநாராயணா தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனை நடத்தினர். மயிலம் சாலை வழியாக மாநில எல்லையான சேதராப்பட்டு அருகே அதிகாலை வந்த மினி கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

  இந்திய அரசு வாகனம் என எழுதியிருந்த அந்த லாரியில், மூட்டை, மூட்டையாக ரூ.55 லட்சம் மதிப்பிலான சில்லறைக் காசுகள் இருந்தது தெரிய வந்தது.

  இதுகுறித்து லாரி ஓட்டுநர் சிதம்பரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணனிடம் (30) விசாரணை நடத்தினர். அவர், சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து புதுவைக்கு அக்காசுகளை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

  அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், சந்தேகமடைந்த பறக்கும் படையினர், லாரியை போலீஸில் ஒப்படைத்தனர். இதனையடுத்து லாரி மற்றும் காசுகளை பறிமுதல் செய்த புதுவை சேதராப்பட்டு போலீஸார், லாரி ஓட்டுநர் அரிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். அதற்கான ஆவணங்களை வங்கியிலிருந்து கேட்ட போலீஸார், லாரியை புதன்கிழமை மாலை விடுவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai