சுடச்சுட

  

  வாக்குப் பதிவு செயல் விளக்கம்:தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டுகோள்

  By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்குப் பதிவு இயந்திர செயல்விளக்கத்தை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்று லால்பகதூர் சாஸ்திரி சமூக சேவை மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து அம்மன்றத்தின் தலைவர் கலியமுருகன் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக, அமைதியாக நடத்தவும், மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும் நடவடிக்கை எடுத்து வரும், தேர்தல் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

  தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் விதமாக, நடமாடும் வாக்குப் பதிவு விழிப்புணர்வு வாகனங்கள் சென்று வருகின்றன. நேரமின்மை காரணமாக, இதனை பல வாக்காளர்களும் தெரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் தெரிந்துகொள்ளும் விதத்தில், வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல் முறை விளக்கத்தை, படக் காட்சியாக பதிவு செய்து, உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும்.

  தற்போது இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளதால், அதனை பயன்படுத்துவது குறித்தும் தேர்தல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai