சுடச்சுட

  

  அடகுக் கடை கொள்ளை:தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரணை

  By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை நகை அடகுக் கடையில் கொள்ளை நடந்த இடத்தில் தமிழக சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

  புதுவை ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராதேஷாம்தூத் (45). நெல்லித்தோப்பு சிக்னல் அருகே அடகுக் கடை வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி கடைக்கு வந்த மர்ம நபர்கள், அவரை கொலை செய்துவிட்டு, ஏராளமான நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

  இது குறித்து புதுவை எஸ்பி பிரவீன் திரிபாதி, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரவல்லபன் தலைமையிலான போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

  இந்த வழக்குத் தொடர்பாக, சென்னை சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி மற்றும் போலீஸார் வியாழக்கிழமை நெல்லித்தோப்பு அடகுக் கடை பகுதியைப் பார்வையிட்டு விசாரித்தனர்.

  அப்போது எஸ்பி பிரவீன்திரிபாதி மற்றும் புதுவை போலீஸார் உடனிருந்தனர்.

  புதுவை சம்பவத்தைப் போல், சென்னை ஆவடியிலும் நகைக் கடையில் கொள்ளை நடந்துள்ளதாகவும், அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் புதுவையிலும் கைவரிசை காட்டியுள்ளதாகப் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

  அது தொடர்பாகவே புதுவைக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் கொள்ளைக் கும்பல் பிடிபடும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai