சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) தேர்தல் அறிக்கை வெளியீடு

    By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் மாநிலச் செயலர் சோ.பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை புதுவையில் வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் வருமாறு: அதிகாரம் முழுமையாக மக்களைச் சென்றடையும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுதந்திரமான அதிகாரம், நிதி கட்டமைப்பு உடையதாக செயல்பட உத்தரவாதம் அளிக்கப்படும். மாநிலத்துக்கான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், அதன் பலன் ஏழை மக்களைச் சென்றடைய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். பொதுத்துறை, கூட்டுறவுத்துறை, பஞ்சாலை முழுமையாக இயங்கிட போதிய நிதி பெற்றுத் தரப்படும். மின்கட்டண உயர்வை குறைக்கவும், சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் கிடைக்கவும் வழி வகை செய்யப்படும்.

    நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களை தண்டிக்க போராட்டம் நடத்தப்படும். கல்விக் கட்டணங்களை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகளிடமிருந்து திட்டங்களுக்காகப் பெறப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும். காரைக்காலில் விவசாய நிலத்தை அழித்து உருவாக்கப்படும் தனியார் விமான நிலையத்தின் உரிமத்தை ரத்து செய்யக் குரல் கொடுப்போம் என அந்த அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    இந்நிகழ்ச்சியின் போது வேட்பாளர் ஜி.பழனி, நிர்வாகிகள் லெனின், சங்கரன், மோதிலால் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai