சுடச்சுட

  

  "ஊழல், மதவாதத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்'

  By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் தேர்தலின் மூலம் ஊழல், மதவாதக் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

  புதுவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.விசுவநாதனை ஆதரித்து அவர் காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் புதன்கிழமை இரவு பிரசாரம் செய்தார்.

  மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்ற பிரசாராத்தில் செயற்குழு உறுப்பினர் தா.முருகன், நகர் கமிட்டி, உழவர்கரை கமிட்டி செயலர்கள் பிரபுராஜ், லெனின்துரை, பிரதேச குழு உறுப்பினர்கள் மதிவாணன், சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் நகர் கமிட்டி செயலர் முருகன் உள்பட ஏராளமான இடதுசாரி கட்சி ஊழியர்கள் பங்கேற்றனர் .

  இந்நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

  கடந்த 2002-ம் ஆண்டு நடந்த

  குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்த முதல்வர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புதுச்சேரி வாக்காளர்கள் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்.

  தமிழகத்தில் இடதுசாரிகள் எந்த பக்கம் இருக்கின்றார்களோ அந்த கட்சியே வெற்றிவாகை சூடி வந்துள்ளது. தற்போது இடதுசாரிகள் 18 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

  இந்திய நாட்டின் சிறு வியாபாரத்தை பாதுகாக்க சரியான கொள்கை இல்லாத கட்சிகள் தான் காங்கிரஸ்-பாஜக.

  ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை கொண்டவர்கள். இவர்களுக்கென்று மாற்றுக் கொள்கை கிடையாது. எனவே தான் மாற்றுக் கொள்கையை முன்னிருத்தி இத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai