சுடச்சுட

  

  என்.ஆர். காங்கிரஸுக்கு திருவண்ணாமலை சாதுக்கள் வாக்குச் சேகரிப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திருவண்ணாமலையைச் சேர்ந்த சாதுக்கள் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

  புதுவை முதல்வர் என்.ரங்கசாமி ஆன்மிகவாதியாவார். தேர்தல், ஆட்சி அமைத்தல், திட்டங்களை செயல்படுத்துதல் என்று எதுவாக இருந்தாலும் சித்தர்களை வழிபட்ட பின்னரே அதனை செயல்படுத்துவது வழக்கம்.

  அண்மையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக ரங்கசாமி சேலத்திலுள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலில் வழிபட்டு வந்த பின்னர், புதுவையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

  இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக,திருவண்ணாமலையிலிருந்து வந்த சாதுக்கள் புதுவையில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

  காவி உடையில் வந்த சாதுக்கள் வெ.ரங்கராஜ், மு.சிவசண்முகம், அ.பலராமன், கு.பக்தவச்சலம், ரா.துரைராஜ், அ.தயாநிதிமாறன், ந.கங்காதரன், ஆ.சங்கர் ஆகியோர் புதுவை நேரு வீதியில் மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனர்.

  இதுகுறித்து அவர்கள் கூறியது: தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இல்லை. எந்த ஆசையும் சாதுக்களுக்குக் கிடையாது. எங்களைப் போன்ற ஆன்மிக சித்தரான புதுவை முதல்வர் என்.ரங்கசாமி, கைகாட்டும் நபர் மக்களுக்கு நல்லது செய்பவராக இருப்பார். அவரால் புதுவை மக்களுக்கு நலத் திட்டங்களை செய்திட முடியும்.

  அதற்காகவே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வாக்குச் சேகரிக்கிறோம் என்றனர் சாதுக்கள்.

  இவர்கள், பெருமாள் கோயில் வீதி, சிவன்கோயில் வீதி, நேரு வீதி உள்ளிட்டப் பகுதிகளில், துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தனர்.

  இப் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகி கே.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai