சுடச்சுட

  

  காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

  By காரைக்கால்,  |   Published on : 18th April 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : ஏசு தமது 12 சீடர்களின் பாதம் கழுவியதை நினைவூட்டும் வகையில், புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

  கிறிஸ்தவர்கள் மேற்கொண்டுள்ள 40 நாள் தவ காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனிதவெள்ளியையொட்டி, வியாழக்கிழமை காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  ஏசுநாதர் தமது சீடர்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இல்லை, சமமானவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இவ்வகை செயலில் ஈடுபட்டார்.

  அதனை சந்ததியினருக்கு வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும், கிறிஸ்தவ ஆலயம் சார்பில் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

  காரைக்காலில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த புனித தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில், தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

  காரைக்கால் பங்குத் தந்தை அந்தோனி லூர்துராஜ், முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு, வளாகத்தில் திரண்டிருந்த மக்களின் மத்தியில், 12 சீடர்களின் பாதம் கழுவி முத்தமிட்டார்.

  தொடர்ந்து புனித வாரத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai