சுடச்சுட

  

  புதுச்சேரி எம்பி தொகுதி திமுக வேட்பாளர் எச்.நாஜிம் வியாழக்கிழமை திருபுவனை பகுதியில் வாக்குச் சேகரித்தார்.

  புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்து வரும் நாஜிம் அதன் தொடர்ச்சியாக திருபுவுனை பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.

  இந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

  வேட்பாளர் நாஜிம் பேசியதாவது: தொடர்ந்து 23 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள நாராயணசாமி புதுவையின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்?

  தன்னால் தான் பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறி வருகிறார். முதல்வர் ரங்கசாமியோ புதுவைக்கு நிதி கிடைக்காமல் நாராயணசாமி தடுத்து விட்டதாகக் கூறி வருகிறார்.

  ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை ரங்கசாமி நிறைவேற்றவில்லை.

  வரும் தேர்தலில் திமுக வென்றால் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெறப்படும்.

  விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் துயர் தீரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்படும் என்றார் நாஜிம்.

  இந்நிகழ்ச்சியில் தொகுதிச் செயலர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் டிபி.பழனி, ப.காந்தி, செல்வ பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai