சுடச்சுட

    

    பல்கலைக்கழக பிரச்னை:புதிய விசாரணைக் குழு அமைப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவரை பேராசிரியர்கள் துன்புறுத்தியது தொடர்பாக எழுந்த பிரச்னை குறித்து விசாரிக்க குழு அமைத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    புதுவை பல்கலைக்கழக மகளிர் விடுதியில் திருட முயன்றதாக குற்றம் சாட்டி தமிழ்த்துறை மாணவர் ராதாகிருஷ்ணனை பேராசிரியர்கள், காவலர்கள் சிலர் சிறை வைத்து தாக்கியுள்ளனர். பல்கலைக் குழுவினர் விசாரித்ததில் உண்மையில்லை என தெரிய வந்தது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி மாணவர்கள் நிர்வாக அலுவலகத்தில் முறையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக பேராசிரியர்கள் ஹரிகரன், பூஷன்சுதாகர், பாதுகாவல் அலுவலர்கள் ஷியாம், குணசேகரன் ஆகியோர் மீது காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

    மாணவரை துன்புறுத்திய பேராசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் வியாழக்கிழமை நிர்வாக அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

    மேலும் இவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான காலாப்பட்டு போலீஸார் வாயில் கதவுகளை மூடி மாணவர்களைத் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    இதனையடுத்து, துணை வேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி, எஸ்பி பிரவீன்திரிபாதி உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேசினர்.

    இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற காவல் துறைத் தலைவர் நரசிம்மன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வீரநாத்ராவ், காவல் கண்காணிப்பாளர் தமிழரசி ஆகியோர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளனர்.

    இவர்கள் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பித்த பின், ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai