சுடச்சுட

  

  பாரதியார் பல்கலைக் கூடத்தில் நாட்டியப் பயிலரங்கம்

  By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில் நாட்டியத்துறை சார்பில் மூன்று நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

  இதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியை பாரதியார் பல்கலைக் கூடம் நாட்டியத்துறை பேராசிரியர் சாந்திபாபு வரவேற்றார். பல்கலைக் கூட உறுப்பினர்-செயலர் த.சுப்பரமணியேஸ்வரராவ் தலைமை வகித்துப் பேசினார்.

  ஓவியத்துறை தலைவர் சிற்பி ஜெயராமன் பேசினார். புதுவை பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் முருகவேல் சிறப்புரையாற்றினார்.

  பேராசிரியை மகேஸ்வரி வாய்ப்பாட்டு பாடினார். கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவிகள் கல்பனா, ரஞ்சிதா செய்திருந்தனர். மூன்று நாள் நிகழ்வில் அமிர்தமதன கூத்து, ஆழ்கடல் நிசப்தம், பறையாட்டம் போன்றவை நடைபெற்றன. இதில் உடை, ஒப்பனை, ஒளி, மேடை குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. பயிலரங்க ஏற்பாடுகளை துறைத் தலைவர் சாந்தி பாபு செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai