சுடச்சுட

    

    பைப் வெடிகுண்டு வழக்கு: கைதானவர்களிடம் சம்பவ இடத்தில் விசாரணை

    By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் பைப் வெடிகுண்டு வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்த தேசிய புலனாய்வு அமைப்பினர், சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    புதுவை மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி காருக்கு அடியில் மர்ம நபர்கள் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த (என்ஐஏ) துணைக் காவல் கண்காணிப்பாளர் ஷர்மா, இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக, மதுரையில் பைப் வெடிகுண்டு வைத்து கைதான தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச் சேர்ந்த தேவக்கோட்டை கவியரசன்(33), திருச்செல்வம் (36), காளைலிங்கம் (34), தங்கராஜ் என்கிற தமிழ்வாணன் (35) ஆகியோரை என்ஐஏ போலீஸார் கைது செய்து கடந்த ஏப்ரல் 9-ம் தேதி புதுவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனையடுத்து, புதுவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி என்ஐஏ போலீஸார் அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    மதுரை வணிக வளாகத்தில் குண்டு வைக்கப்பட்ட இடம், அவர்களது சொந்த ஊரான சிவகங்கைப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

    தொடர்ந்து புதன்கிழமை புதுவை எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு உள்ளிட்ட இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

    காவல் அனுமதிக்கான காலக்கெடு நிறைவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை கவியரசன் உள்ளிட்ட 4 பேரையும், என்ஐஏ போலீஸார், புதுவை முதன்மை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி சி.எஸ். முருகன் அவர்களை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தர விட்டார். இதனையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த வழக்குத் தொடர்பாக 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் நாள்கள் அவகாசம் கேட்டு என்ஐஏ போலீஸார் அனுமதி கோரினர். இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படுமென்று முதன்மை நீதிபதி

    தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai