சுடச்சுட

    

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் "மழலை ஞானம்' நூலிற்கு சிறந்த சிறுவர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் செந்தமிழ் பற்றாளர் சங்கம் அமைப்பு சார்பில் "வாக்களிப்பது நமது கடமை' என்ற தலைப்பில் கருத்தரங்கம், கோனேரி ராமசாமி எழுதிய "மழலை ஞானம்' என்ற நூலுக்கு சிறந்த சிறுவர் இலக்கிய விருது வழங்குதல், கட்டுரைப் போட்டியாளர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை வகித்தார். கவிஞர் பாலசுப்பிரமணியன், ஒய்ஸ்மேன் பள்ளி இயக்குநர் சந்திரமௌலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தமிழ் பற்றாளர் சங்க நிறுவனர் சொக்கநாதன் விளக்க உரையாற்றினார். பாவலர் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார். தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சீனு வேணுகோபால் மழலை ஞானம் நூலினை ஆய்வு செய்து பேசினார்.

    விழாவில், மழலை ஞானம் நூலிற்கு சிறந்த சிறுவர் இலக்கிய விருதினை நூலாசிரியர் கலைமாமணி கோனேரி ராமசாமிக்கு முன்னாள் தலைமை நீதிபதி சேதுமுருகபூபதி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai