சுடச்சுட

  

  கண்ணன் எம்பியையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னையும் ஏமாற்றிதான் இருமுறை வைத்திலிங்கம் முதல்வரானார். அவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைப் பற்றி பேச தகுதி கிடையாது என்று முதல்வர் ரங்கசாமி கூறி உள்ளார்.

  புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனூர் அடுத்த காட்டேரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி வியாழக்கிழமை பேசியதாவது:

  நல்ல அதிகாரிகளை மாற்றியதுதான் நாராயணசாமியின் சாதனை. ஆளுநரையும் மாற்றினார். புதுவை அரசுக்கு 3 ஆண்டுகளில் ஏற்பட்ட இன்னல்கள், நெருக்கடிக்கு அவர்தான் காரணம்.

  வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தகுதி பற்றி பேச முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்துக்கு தகுதி கிடையாது.

  எம்பி கண்ணனையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னையும் ஏமாற்றிதான் 2-வது முறையாக வைத்திலிங்கம் முதல்வரானார்.

  சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். நான் முதல்வராக இருந்த போதுதான் ஆதிதிராவிடர்களுக்கு சிறப்புக் கூறு நிதியை அதிகளவில் பெற்று வந்தேன்.

  ஆனால், இந்நிதி பெறுவதையும் தடுத்தவர்தான் நாராயணசாமி என்று குறிப்பிட்டார்.

  பிரசாரத்தின் போது சட்டப்பேரவை துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai