சுடச்சுட

  

  புதுவையில் ஆளில்லாத வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 30 சவரன் மதிப்பிலான நகைகளைக் திருடிச் சென்றதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  புதுவையை அடுத்த நெட்டாப்பாக்கம் பண்டசோழநல்லூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (38). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வைத்துள்ளார். தற்போது லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் 2-வது குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

  கடந்த புதன்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு இவரது மனைவி மம்தாவின் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்றிருந்ததாகத் தெரிகிறது.

  இந்நிலையில், வீட்டின் கதவினை உடைத்து பீரோவிலிருந்த 30 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

  சென்னையிலிருந்து சாந்தகுமார் வியாழக்கிழமை மாலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவை உடைத்து திருட்டு நடந்துள்ளது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் புதுவை வடக்கு எஸ்பி பிரவீன்திரிபாதி, லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீஸார் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai