சுடச்சுட

    

    "உணவு தானியத்தை கடலில் கொட்ட ரூ.87 கோடி செலவு செய்தது காங்கிரஸ்

    By 'புதுச்சேரி,  |   Published on : 19th April 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களுக்கு வழங்கப்படாமல் வீணாகிய உணவு தானியத்தை கடலில் கொட்டுவதற்கு ரூ.87 கோடி செலவு செய்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்று ஏ.கே.பத்மநாபன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்குச் சேகரிக்கும் பிரசாரம் காந்திவீதியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் வாக்குச் சேகரித்து பேசியதாவது:

    மத்திய ஜக்கிய முற்போக்கு அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைபடாத அரசாகத் தான் இருந்து வந்தது.

    மத்திய உணவு கிடங்குகளில் பல லட்சம் மெட்ரிக் உணவு தானியங்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் வீணாகியது. அதனை பொதுவிநியோக முறையில் வழங்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய போதும் மன்மோகன்சிங் வழங்க முன்வரவில்லை.

    அந்த உணவு தானியங்கள் மக்கி வீணாகியது. அதை கடலில் கொட்டுவதற்கு ரூ.87 கோடி செலவு செய்தது.

    குஜராத் இந்தியாவின் ரோல் மாடல் என்ற பொய்ப் பிரசாரத்தை பாஜக செய்து வருகிறது. எந்த வகையில் குஜராத் சிறந்துள்ளது?

    மாநிலத்துக்கு உரிய திட்டங்களை பெற்றுத் தராத மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியையும், மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை கேட்டு பெறாத முதல்வர் ரங்கசாமியையும் புறக்கணிக்க வேண்டும். எனவே இடதுசாரி கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதனை ஆதரிக்க வேண்டும் என்றார்.

    பிரசாரத்தின் போது மார்க்சிஸ்ட் பிரதேச செயலர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முருகன், சேதுசெல்வம் உள்ளிட்ட திரளானோர்

    பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai