சுடச்சுட

    

    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, புதுவை இன்டெகரா சாப்ட்வேர் நிறுவனம், இந்திய மகளிர் கூட்டமைப்பு ஆகியன சார்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி செல்வம் ராமச்சந்திரராஜ் தலைமையில் மருத்துவர்கள் முகாமை நடத்தினர்.

    முகாமைத் தொடங்கி வைத்து இன்டெகரா மேலாண் இயக்குநர் ஸ்ரீராம் சுப்பிரமணியர் பேசுகையில்: இது இன்டெகரா சார்பில் நடத்தப்படும் 7-வது ரத்த தான முகாம். நமது நாட்டில் 8.5 மில்லியன் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் ரத்த தானத்தின் மூலம் 6 மில்லியன் யூனிட் ரத்தமே பெறப்படுகிறது.

    மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் ரத்த தானம் செய்தாலே இது சாத்தியமாகும். ரத்த தானம் செய்வதால் மாரடைப்பு, புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்றார். இந்திய மகளிர் கூட்டமைப்புத் தலைவி அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai