சுடச்சுட

    

    உழவர்கரை தொகுதியில் இன்று நாராயணசாமி வாக்குச் சேகரிப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 19th April 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி சனிக்கிழமை வாக்குச் சேகரிக்கிறார்.

    இது தொடர்பாக ஐஎன்டியூசி மாநிலத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

    மத்திய அமைச்சரும், வேட்பாளருமான நாராயணசாமி சனிக்கிழமை மாலை நாடியம்மன் ஹோட்டல், பாவாணர் நகர், ஜவஹர் நகர், ஹவுசிங் போர்டு, ரெட்டியார்பாளையம், புது நகர், உழவர்கரை, மேரி உழவர்கரை, மூலக்குளம், பிச்சவீரன்பேட்டை, முத்துப்பிள்ளைப்பாளையம், அரும்பார்த்தபுரம் ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரிக்கிறார்.

    எனவே இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், மாணவர், சேவாதளம், பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai