சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: திமுக புகார்

    By புதுச்சேரி  |   Published on : 19th April 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என திமுக மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார்.

    திமுக வேட்பாளர் நாஜிம்மை ஆதரித்து நெல்லித்தோப்பு பகுதியில் நடைபெற்ற

    பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    மத்திய அமைச்சர் நாராயணசாமி சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீரமைத்து அமைதியான மாநிலமாக உருவாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன், தொகுதிச் செயலர் செ.நடராஜன், நிர்வாகிகள் கே.சித்து, இளங்கோவன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai