சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸ் வழக்குரைஞர் அணி தேர்தல் பிரசாரம்

    By புதுச்சேரி,  |   Published on : 19th April 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் வழக்குரைஞர் அணி சார்பில் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ரங்கநாதன், புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.குமரன், ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.மோகன்தாஸ், வழக்குரைஞர்கள் எம்.திருக்கண்ணவேலன், குமரேசன், சித்ரா, தனலட்சுமி, பாலகி, இந்துமதி, வெண்ணிலா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் புதுவை நகரின் பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தனர்.

    முதல்வர் ரங்கசாமி அரசின் நலத் திட்டங்கள், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கு ஆகியன குறித்து பொதுமக்களிடமும், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai