சுடச்சுட

    

    கட்சிக்கு ஆதரவு: பொதுப்பணித் துறை ஊழியர் சஸ்பெண்ட்

    By புதுச்சேரி  |   Published on : 19th April 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட பொதுப்பணித்துறை ஊழியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

    அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் செயல்படுவது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். ஊழியர்களின் நடத்தை விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பொதுப்பணித்துறையில் மஸ்தூராகப் பணிபுரியும் ஆறுமுகம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டாராம். ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆறுமுகம் மீது மாவட்டத் தேர்தல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் ஏனாம் பிராந்தியத்தில் தங்கி இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் தீபக்குமார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai