சுடச்சுட

    

    கேபிள் டிவியில் பிரசாரம்: காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 19th April 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் விதிகளை மீறி காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசார விளம்பரம் ஒளிபரப்பியதாக காங்கிரஸ் பிரமுகர் ஜான்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    புதுவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் தேர்தல் விதிகளை மீறி, அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாக தேர்தல் துறைக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கேபிள் டிவி ஒளிபரப்பை கண்காணித்தனர்.

    உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பிரசார விளம்பரங்கள் ஒளி பரப்பாகியுள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கண்காணித்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி ரகுராமன் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரம் ஒளிபரப்பியதாக காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அழைப்பாளர் ஜான்குமார் மீது உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு

    செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai