சுடச்சுட

  

  கோடை விடுமுறை சிறப்புப் பயிற்சி வகுப்புகள்

  By புதுச்சேரி  |   Published on : 19th April 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை விடுமுறை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

  இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு, பள்ளிக் கல்வி இயக்ககம், ஜவஹர் சிறுவர் இல்லம் ஆகியன சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடனம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு உள்ளிட்டவை கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  இதில் 6 முதல் 16 வயதுள்ள புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

  இச்சிறப்பு வகுப்புகள் புதுச்சேரி ஜவஹர் சிறுவர் இல்லம், லாஸ்பேட்டை, கோல்க்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி, அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட 6 இடங்களில் நடைபெறுகின்றன.

  வரும் 28-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்க உள்ளது.

  இதற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட மையங்களில் வரும்

  25-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார் .

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai