சுடச்சுட

  

  தேர்தலின்போது தான் ரங்கசாமிக்கு மக்கள் குறித்து சிந்தனை எழும்

  By புதுவை,  |   Published on : 19th April 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : தேர்தலின் போது தான் முதல்வர் ரங்கசாமிக்கு மக்கள் குறித்த சிந்தனை எழும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.நமச்சிவாயம் கூறியுள்ளார்.

  திருக்கனூர் கடை வீதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக அவர் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து பேசியதாவது:

  கடந்த 3 வருடத்தில் ரங்கசாமி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தேர்தலின் போது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்று ரங்கசாமி கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்துத் தொகுதியை சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 வருடத்தில் அவர் தொகுதியில் மட்டும்தான் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  3 ஆண்டுகளில் புதுவையில் இதுவரை 17 கொலைகள் நடந்துள்ளன.

  ராதாகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல் செய்த நாளில் கூட நெல்லித்தோப்பில் ஒரு அடகுக் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தை நடைமுறை படுத்தாமல் அப்பாவி மக்களை கைது செய்கின்றனர்.

  ரூ.3 ஆயிரம் கோடி அளித்த மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரம் கோடி போதும் என பெற்று வந்த ரங்கசாமி, எப்படி 3 ஆண்டுகளில் செய்ய முடியாத திட்டத்தை 2 ஆண்டுகளில் செய்வார்.

  நான் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் துணையோடு குடிநீர் மேம்பாடு உள்ளிட்டத் திட்டங்களுக்காக ரூ.643 கோடி மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் வந்தேன்.

  முதல்வர் ரங்கசாமி முயற்சி செய்து புதுதில்லி சென்றிருந்தால் எத்தனை ஆயிரம் கோடி நிதி கிடைக்கும். தேர்தல் வந்தால் மட்டும்தான் ரங்கசாமிக்கு புதுவையில் 30 தொகுதிகள் இருக்கிறது என்பது தெரியும்.

  தேர்தல் முடிந்தால் அவருக்கு ஒரு தொகுதி மட்டும்தான் தெரியும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் நமச்சிவாயம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai