சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து நரிக்குறவர்களுக்கு கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  100 சதவீதம் வாக்குப்பதிவு, நேர்மையான முறையில் வாக்களிப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முறையான பிரசாரத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுபட்ட சமுதாயத்தினரைக் கண்டறிந்து விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப்பட்டு வருகிறது.

  இதன் ஒரு பகுதியாக கருவடிக்குப்பம் அருகே உள்ள நரிக்குறவர் காலனியில் தேர்தல் துறை, உழவர்கரை நகராட்சி மகளிர் நுகர்வோர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்தப்பட்டது.

  இந்நிகழ்ச்சிக்கு திலகவதி தலைமை வகித்தார்.

  இதை முன்னிட்டு, சூரிய ஒளி சக்தியால் இயங்கும் மாதிரி வாக்குச்சாவடி வேன் கொண்டு வரப்பட்டு அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து நரிக்குறவர்களுக்கு செயல்முறை விளக்கம் தரப்பட்டது.

  முதன் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

  பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏராளமானோரும் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு, வாக்களிக்கும் முறை குறித்து அறிந்து கொண்டனர்.

  இம்முகாமில் மனித உரிமை பாதுகாப்புச் செயலர் முருகானந்தம், பக்கிரிசாமி, கிருஷ்ணமூர்த்தி, நேரு யுவகேந்திரா பெரியநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  இதற்கான ஏற்பாடுகளை வாக்காளர் கல்வி பொறுப்பு அலுவலர் சு.செழியன் பாபு செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai