சுடச்சுட

  

  புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பிரச்னையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

  தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார் நாராயணசாமி.

  புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதி தராமல் புறக்கணித்து வருகிறது. மத்திய அரசிடம் இரு வகையான நிதிக் குழுக்கள் உள்ளன. ஒன்று மாநில அரசுகளுக்கும், மற்றொன்று யூனியன் பிரதேசங்களுக்கும் நிதி ஒதுக்கித் தருவதாகும்.

  புதுவை யூனியன் பிரதேசம் ஆதலால் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கும் குழுவில் சேர்க்கப்படவில்லை. மேலும் புதுவையில் சட்டப்பேரவை இருப்பதால் யூனியன் பிரதேசத்துக்கு நிதி வழங்கும் குழுவிலும் சேர்க்கப்படவில்லை.

  இதனால் புதுவையிலிருந்து மத்திய அரசு வசூலிக்கும் வரித் தொகையில் உரிய பங்கு கிடைப்பதில்லை. இதற்கு நாராயணசாமி எந்த தீர்வும் காணவில்லை.

  புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால், தானாகவே மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்பட்டு மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கும்.

  இதைக் கருத்தில் கொண்டு தான் புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து பெற திமுக பாடுபடுகிறது.

  மத்திய அமைச்சர் நாராயணசாமி என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநில அந்தஸ்து வேண்டும் எனக் கேட்டார். தற்போது புதுவை பிராந்தியத்துக்கு கிடைக்க வகையில்லாத சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்க வழி செய்வோம் என பிரசாரம் செய்கிறார்.

  ஏனாமில் பிரசாரம் செய்த போது, முழு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்க மாட்டேன்.

  யூனியன் பிரதேசமாக தொடரந்து நீடிக்க பாடுபடுவேன் எனக் கூறியுள்ளார்.

  இவ்வாறு இரட்டை வேடும் போடும் நாராயணசாமிக்கு வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai