சுடச்சுட

  

  நாராயணசாமி பொய்ப் பிரசாரம்: முதல்வர் ரங்கசாமி

  By புதுச்சேரி  |   Published on : 19th April 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அமைச்சர் நாராயணசாமி வேண்டும் என்றே பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

  புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து உப்பளம், உருளையன்பேட்டை பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்து பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான். கடந்த 3 ஆண்டாக புதுவை அரசுக்கு இன்னல்களும், நிதி நெருக்கடி போன்ற தொல்லைகளும் ஏற்பட்டன. இதற்கு காரணம் மத்திய அமைச்சர் நாராயணசாமிதான்.

  23 ஆண்டு காலம் எம்பியாக இருக்கும் நாராயணசாமி புதுவையின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை.சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் 2 ஆண்டில் முழுமையாக நிறைவேற்றுவேன். தற்போது ரேஷன்கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸார் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வைத்திலிங்கம் எதையும் செய்யவில்லை. எனது ஆட்சியில்தான் மாணவர்களுக்கு சென்டாக் கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யாத நாராயணசாமி நான் ஒன்றும் செய்யவில்லை என பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என்றார் ரங்கசாமி.

  பிரசாரத்தின்போது அரசு கொறடா நேரு, முன்னாள் எம்எல்ஏ புஸ்சி ஆனந்து உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai