சுடச்சுட

  

  மோடி படத்தை பயன்படுத்த தடை விதிக்க புதுவை பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பாமக வேட்பாளரும், மாநில செயலாளருமான அனந்தராமன் கூறினார்.

  புதுவையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  புதுவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா, தேமுதிக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், லோக் ஜனசக்தி ஆதரவுடன் போட்டியிடுகிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் எனது வெற்றிக்காக தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் பாஜக நிர்வாகிகள் விஸ்வேஸ்வரன், கேசவலு, சாமிநாதன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலர் பாலன் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து, நாங்கள் மோடி படத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என கடிதம் அளித்துள்ளனர். இதற்கு புதுவை மாநில பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை.

  கூட்டணி முடிவு, வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டியது பாரதிய ஜனதாவின் தேசிய தலைமைதான். தமிழகத்தில் இதே கூட்டணியில் போட்டியிடக்கூடிய கட்சிகளுக்கு பாமகவின் முழு ஆதரவு உள்ளது.

  தமிழகத்தில் 3 நாள்களாக மோடி தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். இந்த பிரசாரத்தின்போது முதல்வர் ரங்கசாமியோ, வேட்பாளரோ மோடியை சந்திக்கவும் இல்லை. கூட்டத்தில் பங்கேற்கவும் இல்லை. பாரதிய ஜனதாவில் உள்ள ஒரு சிலர் சுயநல நோக்கத்துடன் என்.ஆர்.காங்கிரஸை ஆதரிக்கின்றனர்.

  பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் எந்த இடத்திலும் கூட்டணி சார்பில் புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது எனக் கூறவில்லை.

  புதுவை பாஜக நிர்வாகிகள் அனைவரும் பாமகவுக்கு ஆதரவாக விரைவில் பிரசாரத்தில் ஈடுபடுவர் என்றார் அனந்தராமன்.

  இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாநிலச் செயலர் செல்வராஜ், ஐஜேகே சக்திவேல், லோக் ஜனசக்தி உமாசுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai