சுடச்சுட

  

  மத்திய பல்கலை.யில் 25% ஒதுக்கீட்டை புதுவை மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 19th April 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள பாடப் பிரிவுகளில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்க வேண்டும் என முன்னாள் எம்.பி.யும், சுயேச்சை வேட்பாளருமான எம்.ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

  இது தொடர்பாக அவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளருக்கு எழுதிய கடிதம்:

  புதுவை மக்களின் உயர்கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1985-ல் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

  இப்பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுவை மாணவர்கள் சேருவதற்கான வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்த்தனர். கடந்த 1997-ம் ஆண்டு வரை புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

  ஞானம் துணை வேந்தராக இருந்த போது தான் அப்போதிருந்த பாடப் பிரிவுகளில் 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை கல்விக்குழு ஒப்புதலோடு வழங்கப்பட்டது.

  தற்போது பல்கலைக்கழகத்தில் 56 வகையான பாடப் பிரிவுகள் உள்ளன. இதில் 18 படிப்புகளில் மட்டுமே 25 சதவீதம் ஒதுக்கீடு தரப்படுகிறது. வேலைவாய்ப்பு மிகுந்த எந்த புதிய பாடத்திலும் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு தருவதில்லை.

  இதனால் புதுவை மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் ஒரே பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு கொள்கை மாறுபடுவது அரசியல் சட்ட விரோதமாகும்.

  புதுவை மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இப்பல்கலைக்கழகம் உதவவில்லை என மக்கள் கருதும் நிலை உள்ளது. இக்கல்வியாண்டு இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளது.

  எனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் தலையிட்டு புதுவை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டு தர வேண்டும் என்றார் ராமதாஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai