சுடச்சுட

    

    புதுவை கனரக வாகன நிறுத்தும் மையத்தில் நிறுத்தியிருந்த லாரி திருடு போனதாக போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

    புதுவை அருகே உள்ள கரையாம்புத்துரைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஞானபிரகாஷ் (24). இவர், தனது லாரியை புதுவை கோரிமேடு பகுதியில் உள்ள கனரக வாகன நிறுத்தும் மையத்தில் கடந்த திங்கள்கிழமை நிறுத்தி வைத்திருந்தாராம். அங்கு நின்றிருந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai