சுடச்சுட

    

    அனுமதியின்றி பிரசாரம்: மினி டெம்போ பறிமுதல்

    By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேதராப்பட்டு அருகே அனுமதியின்றி மினி டெம்போவில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.

    புதுவை அருகே உள்ள சேதராப்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி இளந்திரையன் தலைமையில் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, சேதராப்பட்டு-கரசானூர் சாலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபடி வந்த மினி டெம்போவை ஆய்வு செய்தபோது, அனுமதியின்றி அந்த வாகனம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதனையடுத்து, தேர்தல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸில் புகார் அளித்தனர்.

    இது குறித்து சேதராப்பட்டு போலீஸôர், கரசானூரைச் சேர்ந்த துரைராஜ் (28) மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai