சுடச்சுட

  

  : நாடாளுமன்றத் தேர்தலில், இடதுசாரி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டுமென எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வலியுறுத்தியுள்ளார்.

  சாகித்ய அகாதெமி விருது பெற்ற அவர், புதுவையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சி மக்கள் விரோதக் கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. மக்களைப் பிளவுப்படுத்தும் மதவாதக் கொள்கையை பாஜக பின்பற்றுகிறது.

  பொதுமக்கள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களுக்காக என்றும் போராடி வருபவை இடதுசாரி இயக்கங்கள் தான். தற்போது முதன்முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன.

  இது மிகவும் சிறப்பான நிகழ்வு. இரு கட்சிகளும் எப்போதும் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். எனவே வரும் தேர்தலில் புதுவை மக்களவைத் தொகுதியில், வேட்பாளர் விசுவநாதனை மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

  காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் புதுவைக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை.

  எனவே தான் இடதுசாரி கட்சி வேட்பாளரை ஆதரிக்க வலியுறுத்தி பிரகடனம் வெளியிட்டுள்ளோம் என்றார்.

  பிரகடனம்: பிரகடனத்தில் கூறியிருப்பது: சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சி அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், நாடு பின்தங்கியுள்ளது. இதற்கு அக்கட்சி பின்பற்றி வரும் உலகமயமாக்கல் கொள்கைகளே காரணம். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி.

  பாஜக கட்சியின் பாஸிச கொள்கைகளால் நாடு துண்டாகும் அபாயம் உள்ளது. அதன் தேர்தல் அறிக்கையே இதை தெளிவுபடுத்துகிறது. பாஜகவிடம் இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  இவர்களுக்கு பதிலாக இடதுசாரிகள் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்துள்ளனர். மக்கள், உழைப்பாளிகளுக்காக போராடி தியாகம் புரிந்தவர்கள் இடதுசாரிகள்.

  ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இடதுசாரி இயக்கம் எதிர்கால இந்தியாவுக்குத் தேவை எனவே தமிழக, புதுவை மக்கள் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

  அந்த பிரகடனத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், பேராசிரியர் லெனின் தங்கப்பா, புலவர் சீனு.ராமச்சந்திரன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் தேவமைந்தன், கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் வீர.முருகையன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப்பொருளாளர் சு.ராமச்சந்திரன் உள்பட பலர் கையெழுத்திடுட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai