சுடச்சுட

  

  இடதுசாரிகள் வேட்பாளருக்கு ஆதரவாக மாதர் கூட்டமைப்பு பிரசாரம்

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் விசுவநாதனுக்கு ஆதரவாக இந்திய மாதர் சங்கம், தேசிய மாதர் சம்மேளனம் ஆகியன சார்பில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

  சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றிடவும், சமையல் எரிவாயு விலை உயர்வை தடுத்திடவும், பொதுவிநியோக திட்டத்தை பரவலாக நியாயவிலைக் கடைகளில் அரிசி மளிகை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பெற்றிடவும், பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் வன்முறைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்திட உள்ளிட்டக் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்.

  இதற்காக தொடர்ந்து போராடி வரும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு அளிக்கக் கோரி மாதர் சங்கங்கள் சார்பில் இப்பிரசாரம் நடைபெற்றது.

  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் இணைந்து நடத்திய இப்பிரசாரத்துக்கு மாரிமுத்து, ஹேமலதா ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். மாதர் சங்கங்களின் நிர்வாகிகள் பரிமளா, மலர்விழி, சிவகாமி, சாந்தி, சரளா, சுமதி, பானுமதி, சரிதா உள்ளிட்டோர்

  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வில்லியனூரில் துவங்கிய வேன் பிரசாரம் ரெட்டியார்பாளையம், முத்தியால்பேட்டை, நகரம்,சட்டப்பேரவை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai