சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் பிரசாரம்

    By புதுச்சேரி  |   Published on : 20th April 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விசுவநாதனுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் சனிக்கிழமை வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இளைஞர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் இப்பிரசாரம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஏஐஒய்எப் மாநிலச் செயலாளர் அந்தோனி, டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் சரவணன், எஸ்எப்ஐ பிரதேச செயலர் ஆனந்து, ஏஎஸ்ஐஎப் மாநிலத் தலைவர் பிரசன்னா ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். நிர்வாகிகள் கருணாஜோதி, பி.சரவணன், கதிரவன், பாஸ்கர், ரஞ்சித், ஜெயராஜ் உள்ளிட்ட திரளான மாணவர்கள், இளைஞர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

    முன்னதாக சுப்பையா சிலையிலிருந்து துவங்கிய பிரசாரம் புதிய பேருந்து நிலையம், காமராஜர் சிலை, நேருவீதி, காந்திவீதி, இலாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. தொடந்து ஞாயிற்றுகிழமை

    புதுச்சேரி பாகூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதியில் நடைபெற உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai