சுடச்சுட

  

  இயேசு சிலைக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

  By காரைக்கால்,  |   Published on : 20th April 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முத்தி செய்யும் நிகழ்ச்சியும், சிலைக்கு மரிக்கொழுந்து வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  புனித வெள்ளியையொட்டி, ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருச்சிலுவை பாதை ஆராதனை மற்றும் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டு நடத்தப்பட்டது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

  காரைக்கால் மறைவட்ட பங்கு குரு அந்தோனி லூர்துராஜ் சிலுவை சுமந்து வந்தார். கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் சிலைக்கு முத்தி செய்தனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சிலை தூய தேற்றரவு அன்னை மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த இயேசுகிறிஸ்து சிலைக்கு ஏராளமானோர் மரிக்கொழுந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai