சுடச்சுட

  

  புதுச்சேரி வேல்ராம்பட்டில் உள்ள சாரதா கங்காதரன் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ஜி.சுவாமிநாதன் தொடக்கவுரை ஆற்றினார். துணைத் தாளாளர் எஸ்.பழனிராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

  மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவன இணை வேந்தர் ஏ.ஞானம் 272 மாணவ, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: பட்டம் பெறுவது என்பது ஒவ்வொரு மாணவர்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணமாகும். குறிப்பாக இளங்கலை பாடப்பிரிவோடு நிற்காமல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியும். உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

  மாணவ, மாணவியர் தங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆளுமை தன்மை, தொடர்புத் தன்மைகளை மேம்படுத்தினால் தான் எதிர்காலம் சிறந்து விளங்கும் என்றார் ஞானம்.

  பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகள் எம்.திலகவதி, எஸ்.திவ்யா, ஜி.சுருதி ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களை அவர் வழங்கினார்.

  மேலும் ஒவ்வொரு துறையிலும் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai