சுடச்சுட

  

  சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கவில்லை: அதிமுக புகார்

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் அரசில் சிறுபான்மையின மக்களுக்கு நலத் திட்டங்கள் சரிவர கிடைக்கவில்லை என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

  உப்பளம் தொகுதிக்குள்பட்ட புஸ்சி, பெரியபள்ளி வார்டு, நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவாக மாநிலச் செயலர் அன்பழகன் பிரசாரம் செய்து பேசியதாவது:

  புதுச்சேரி ஆளும் ரங்கசாமி அரசு சிறுபான்மையினத்தவருக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்த வில்லை.

  சிறுபான்மையினத்தவருக்கு எதிரான பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார்.

  மத்திய அமைச்சர் நாராயணசாமியும் சிறுபான்மையினத்தவருக்காக எதையும் செய்யவில்லை.

  தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு உள்ள 3.5 சதவீதம் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். புதுவையில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

  தலித் கிறித்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அட்டவணை இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு நிதியையும் ரங்கசாமி அரசு முறையாக செலவழிக்கவில்லை.

  தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல மானிய நிதியுதவி தரப்படுகிறது. புதுவையில் சிறுபான்மையினத்தவருக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமியை மக்கள் புறம் தள்ள வேண்டும்.

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்றார் அன்பழகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai