சுடச்சுட

    

    துண்டுப் பிரசுரங்கள்:வேட்பாளர்கள் மீது வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உரிய அனுமதியின்றி துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதாக பாமக, கம்யூனிஸ்ட் எம்எல் கட்சி வேட்பாளர்கள் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    புதுவை அரியாங்குப்பம் பகுதியில் பாமக வேட்பாளர் ஆர்.கே.ஆர்.அனந்தராமனை ஆதரித்து வீடுகளில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்ட அச்சகத்தின் பெயர் உள்ளிட்ட எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கான செலவினங்கள் குறித்தும் தேர்தல் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லையெனத் தெரிகிறது.

    இதேபோல், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) வேட்பாளர் ஜி.பழனிக்கு ஆதரவாகவும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களும் அதில் தெரிவிக்கப்படாமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

    இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரகுராமன் வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் கொடுத்தார். இதன்பேரில், அனந்தராமன், பழனி ஆகியோர் மீது அரியாங்குப்பம் போலீஸôர் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai