சுடச்சுட

    

    தேர்தல் புறக்கணிப்பு ரத்து:பழங்குடியினர் சங்கம் அறிவிப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை பழங்குடியினர் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு, ஜனநாயக முறைப்படி வாக்களிக்க உள்ளோம் என்று நெட்டப்பாக்கம் கொம்யூன் பழங்குடியினர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அச் சங்கத் தலைவர் ஜி.சங்கர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: புதுவையில் வாழும் பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி

    வருகிறோம்.

    இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், வரும் மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஆட்சிக்கு வந்தால், பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து ஜனநாயக முறைப்படி வாக்களிக்க உள்ளோம் என்றார் ஜி.சங்கர். இந்நிகழ்ச்சியின் போது சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai