Enable Javscript for better performance
தொகுதி வேட்பாளர்கள் விளக்க உரைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மக்கள் நாடி இயக்கம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ஒரே மேடையில் பேசும் விளக்க உரைக் கூட்டம் கருவடிக்குப்பத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் தலைவர் எஸ்.ஹேமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ரகோத்தமன் வரவேற்றார். ஆலோசகர் எமில் முன்னிலை வகித்தார்.

    என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், ஆம் ஆத்மி கட்சியின் வெ.ரங்கராஜன், சுயேச்சை வேட்பாளர் எம்.ராமதாஸ் மற்றும் பல்வேறு வேட்பாளர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் தங்களின் கல்வி, அரசியல் அனுபவங்கள், தேர்தல் அறிக்கையின் முக்கியக் கூறுகள், மாநில

    அந்தஸ்து பெறும் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்தும் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai