சுடச்சுட

  

  நாராயணசாமி ஏன் சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத் தரவில்லை

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசில் செல்வாக்குடன் இருந்த நாராயணசாமி ஏன் புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவில்லை என முதல்வர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அரியாங்குப்பம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

  23 ஆண்டுகளாக எம்பியாக உள்ள நாராயணசாமி கொண்டு வந்த திட்டம் என்ன? சாதனைகள் என்ன? மாநிலத்துக்கு பெற்றுத்தர வேண்டிய நிதியை பெற்றுத் தந்தாரா,கடனையாவது தள்ளுபடி செய்து தந்தாரா ஒன்றுமே செய்யவில்லை.

  காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். மோடிதான் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. நாம் வெற்றி பெற்றால் மத்தியில் அமையும் ஆட்சியில் தேவையான நிதியை எம்பி மூலம் பெறலாம். நாராயணசாமி ஏனாமில் நான் பதவியில் உள்ளவரை மாநில அந்தஸ்து பெற்றுத்தர மாட்டேன் என உறுதி கூறி கடிதம் அளித்துள்ளார். தற்போது சிறப்பு மாநில அந்தஸ்து பெற்ற யூனியன் பிரதேசமாக இருக்க பாடுபடுவேன் என கூறியுள்ளார்.

  மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது என தெரிந்து கொண்டே அவர் இப்படி பேசியுள்ளார். துணைநிலை ஆளுநரை வைத்துக் கொண்டு நிர்வாகத்தில் தலையீடு செய்வதை வழக்கமாக கொண்டவர் நாராயணசாமி. அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார் ரங்கசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai